வாவியின் நடுவே மின்னிய வெசாக் தோரணம்!
வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் அகுரஸ்ஸ மாரம்பே வாவியின் நடுவே வெசாக் தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெசாக் தோரணத்தை 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட முடியும் என கூறப்படுகின்றது.
கொட்டும் மழையில் வாவிக்கு நடுவில் இவ்வாறு பெரிய அழகிய தோரணம் வடிவமைக்கப்பட்டுள்ளமை பரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.
இது குறித்து தோரணத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட நபர் தெரிவிக்கையில், வாவியில் தோரணத்தை செய்யும் படி என்னை ஊர்மக்கள் ஊக்கிவித்தார்கள்.
அதனால் வாவியின் நடுவே பாரிய அழகிய தோரணம் ஒன்றை வடிவமைக்க முடிந்தது. இதற்கு அனைவரும் எனக்கு உதவி புரிந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.