;
Athirady Tamil News

இலங்கையின் அடக்குமுறை வரி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையின் தற்போதைய அடக்குமுறை வரி நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தகவலை ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதன் காரணமாக பல உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் வணிகத்துறையினர் வெளிநாடுகளுக்கு தமது முயற்சிகளை இடமாற்றம் செய்கின்றனர்.

புதிய முதலீடுகள்
புதிய முதலீடுகளும் கணிசமாகக் குறைந்துள்ளதுடன் வரியமைப்பு ஓரளவுக்கு பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது அத்தோடு ஏழைகளை அதிக ஆதரவற்றதாக ஆக்கியுள்ளதுடன் நடுத்தர வர்க்கத்தை வறுமையை நோக்கி செலுத்துகிறது.

எனவே இந்த வரி ஆட்சி, பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையானது மற்றும் நீடிக்க முடியாதது அத்தோடு இந்த செயற்பாடானது அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாக இலங்கை மூன்று வீத வளர்ச்சிக்கும் மேல் செல்ல முடியாது.

ஆகவே, இந்த நிலைமை சரிசெய்யப்பட வேண்டுமானால் வரிவிதிப்பு விகிதத்தை குறைக்கவேண்டும்” என அவர் வலியுருத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.