சீன நிறுவனத்திடம் இருந்து பெற்ற உதிரிபாகங்கள்: பிரபல கார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி!
பிரபல கார் நிறுவனங்களான BMW, Jaguar Land Rover, மற்றும் Volkswagen ஆகியவை சீனாவை சேர்ந்த தடைசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து உதிரிபாகங்களை பெற்றுள்ளதாக அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
இந்த சப்ளையர் நிறுவனத்தின் மீது பலவந்தமான வேலை வாங்குவதற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
செனட் நிதி குழு தலைவர் Ron Wyden-னின் ஊழியர்கள் தயாரித்த அறிக்கையில், குறைந்தது 8,000 BMW மினி கூப்பர் கார்கள் சீனாவின் சிச்சுவான் ஜிங்வேடா டெக்னாலஜி குழுமத்தின் (JWD) உதிரி பாகங்களை கொண்டு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறுகிறது.
சிச்சுவான் ஜிங்வேடா டெக்னாலஜி குழுமம் பலவந்தமான வேலை தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட நிறுவனம் ஆகும்.
மனித உரிமைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம், பலவந்தமான வேலை வாங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்று Jaguar Land Rover தெரிவித்துள்ளது.
அனைத்து JWD உதிரிபாகங்களையும் உலகளவில் தங்கள் இருப்பில் இருந்து அகற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை BMW மற்றும் VW நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.