பிரித்தானியாவைப்போலவே வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் சுவிட்சர்லாந்து
நல்ல விடயங்களுக்கு பிரித்தானியா முன்மாதிரியாக உள்ளதோ இல்லையோ, அந்நாடு புலம்பெயர்தலுக்கெதிராக எடுக்கும் விடயங்களைப் பார்த்து பல நாடுகள் இம்ப்ரஸ் ஆகிவருவதுபோல் தெரிகிறது.
இந்த மாதத்தின் துவக்கத்தில்தான், பிரித்தானியாவைப்போலவே, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டமக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருவதாக செய்தி வெளியானது.
தற்போது, பிரித்தானியாவைப்போலவே சர்வதேச மாணவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை ஒன்றை எடுக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மூன்று மடங்கு வரி செலுத்தவேண்டும்
சுவிட்சர்லாந்தின் Federal Institute of Technology Lausanne (EPFL)இல் புதிதாக இணையும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இனி மூன்று மடங்கு அதிக வரி செலுத்தவேண்டும் என, நாடாளுமன்றத்தின் துறைசார் கமிட்டி வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது. வாக்கெடுப்பில் இந்த திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் கிடைத்துள்ளன.
விடயம் என்னவென்றால், 2025-2028ஆம் ஆண்டுக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் கண்டுபிடிப்புக்கான திட்டத்தில், சுவிஸ் பெடரல் அரசு Federal Institute of Technology Lausanneக்கான நிதியுதவியில் 100 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை குறைக்க திட்டமிட்டுவருகிறது.
ஆகவே, அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், சுவிஸ் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களிடம் மூன்று மடங்கு அதிக வரி வசூலிப்பது முதலான சில திட்டங்களை நாடாளுமன்றத்தின் துறைசார் கமிட்டி தீட்டிவருகிறது. Federal Institute of Technology நிறுவனத்தில், செமஸ்டர் ஒன்றிற்கான கட்டணம், தற்போது 730 சுவிஸ் ஃப்ராங்குகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.