லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பயங்கர அதிர்வு., பயணி ஒருவர் மரணம்
லன்டனிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட பயங்கர அதிர்வு (turbulence) காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Boeing 777-300ER விமானம், லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது.
புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் 30,000 அடி உயரத்தில் turbulence ஏற்பட்டது. இதனால் விமானம் பலமாக குலுங்க ஆரம்பித்தது.
இதில் பயணி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விமானம் சிங்கப்பூருக்கு செல்லாமல், பாங்காக்கில் (Bangkok) அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் (Suvarnabhumi Airport) அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
211 பயணிகள் 18 பணியாளர்கள்..
இந்த விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கிய உடனேயே, பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தை அடைந்தன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பயணியின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் பாங்காக்குடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.