;
Athirady Tamil News

3 மாதம் கடலுக்கு அடியில் வாழ்ந்தவர்…10 வயது இளமையாக மாறிய அதிசயம்!

0

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி 3 மாதங்கள் கடலுக்கு அடியில் கழித்து பிறகு “10 வயது இளமையாக” மாறியுள்ளார்.

கடலுக்கடியில் சோதனை
ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஜோசப் டிடூரி(Joseph Dituri), ஒரு புதுமையான ஆய்வில் கலந்து கொண்டார்.

அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில் அமைக்கப்பட்ட அழுத்தம் தாங்கும் கலத்தில் 93 நாட்கள் கழித்தார்.

இந்த சோதனை மனித உடல் நீண்ட நாட்கள் நீருக்கடியில் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ள மேற்கொள்ளப்பட்டது.

அதிசயமான முடிவுகள்
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது கடல் மட்டத்திற்கு மேலே வந்த பிறகு, ஜோசப் டிடூரி குறிப்பிடத்தக்க உயிரியல் ரீதியான இளமை திரும்பும் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளில் அவரது Telomeres எனப்படும் வயதாகும் போது சுருங்கும் குரோமோசோம்களின் முனைகளில் உள்ள பாதுகாப்பு அமைப்பு 20% நீளம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.

இதுமட்டுமின்றி, அவரது ஸ்டெம் செல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது, மேலும் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கிய குறிகாட்டிகளும் கணிசமாக மேம்பட்டன.

டிடூரி தனது தூக்கம் சிறப்பாக இருப்பதாகவும், வளர்சிதை மாற்றம் அதிகரித்ததாகவும், கொலஸ்ட்ரால் அளவு கணிசமாக குறைந்ததாகவும் தெரிவித்தார்.

அறிவியல் கண்ணோட்டத்தில் அழுத்தத்தின் பங்கு
இந்த அற்புதமான மாற்றங்களுக்கு காரணம் கடலின் அழுத்தம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட அழுத்தம் (Hyperbaric pressure) செல் புத்துணர்வைத் தூண்டி, டிடூரியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

டிடூரியின் அனுபவம், அறிவியல் சமூகத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, ஆரோக்கிய மேம்பாடு மற்றும் நல்வாழ்வுக்காக நீருக்கடியிலான சூழலின் திறனை ஆராய்ச்சி செய்வதற்கான கதவை திறக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.