வெறும் 90 நிமிடங்கள்… பிரித்தானியாவை அச்சுறுத்தும் புடினின் பயங்கர ஏவுகணை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது உக்ரைன் மீது பயன்படுத்தும் ஏவுகணைகளை பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி திருப்பிவிட முடியும் என்றும், அவைகளை தடுக்க வாய்ப்பிலலை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 90 நிமிடங்கள்
ரஷ்யாவில் இருந்து இதுபோன்ற ஏவுகணைகளை ஏவினால் பிரித்தானியாவை அடைய சுமார் 90 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடும் நிபுணர்கள் அவை எல்லா திசைகளிலிருந்தும் தாக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உக்ரைனிடம் இருக்கும் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அளவு இல்லாததால், அத்தகைய தாக்குதலுக்கு எதிராக பிரித்தானியாவால் எதிர்வினையாற்ற முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவின் எந்த பகுதியையும்
உக்ரைன் அளவுக்கு வான் பாதுகாப்பில் பிரித்தானியா இல்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மேலும், மேற்கு ரஷ்யாவில் இருந்து விமானமூடாக 500 கிலோ வெடிபொருளுடன் விடுவிக்கப்படும் ஏவுகணையானது, 90 நிமிடங்களில் லண்டனை வந்தடைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவின் Kh-101 ஏவுகணையானது ஐரோப்பாவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்டது என்றும், மணிக்கு 600 மைல்கள் வேகத்திலும் பயணிக்கக்கூடியது என்றும் குறிப்பிடுகின்றனர்.