இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு தடையாக இருக்கும் அரச குடும்பத்தில் இருவர்
மூத்த அரச குடும்ப உறுப்பினர்களுடனான இளவரசர் ஹரியின் உறவில் விரிசல் நீடிக்கிறது என்றே சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை
இருப்பினும், அவரது சமீபத்திய லண்டன் விஜயம் நல்லிணக்கத்திற்கான சிறிய நம்பிக்கையை அளிக்கிறது என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் லண்டன் திரும்பியிருந்த ஹரி தனித்துவிடப்பட்டார் என்றே கூறுகின்றனர்.
சார்லஸ் மன்னரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டிருந்ததால் அவராலும் ஹரியை சந்திக்க முடியாமல் போனது. அத்துடன் அவரது Invictus Games தொடர்பான ஆராதனையிலும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் சாரலஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்து தெரிய வந்தபோது லண்டன் திரும்பிய ஹரி, தம்மால் இயன்ற அளவு தமது குடும்பத்தை சந்திக்க லண்டன் திரும்புவேன் என்றே நம்பிக்கையுடன் ஹரி தெரிவித்திருந்தார்.
இணைத்துக்கொள்ள தயாராக இல்லை
ஆனால் அந்த உணர்வை அரச குடும்பத்தில் எவரும் மதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஹரி தரப்பில் அனைத்தையும் மொத்தமாக மறந்து குடும்பத்துடன் இணக்கமாக செல்ல தயாராக இருந்தாலும், தற்போது சார்லஸ் மற்றும் வில்லியம் ஆகிய இருவரும் ஹரியை தங்களுடன் இணைத்துக்கொள்ள தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, சமீபத்திய லண்டன் வரவின் போது சார்லஸ் மன்னர் அல்லது வில்லியம் என ஒருவரும் ஹரியை சந்திக்கவில்லை. மாறாக சார்லஸ் மன்னர் முன்னாள் கால்பந்து நட்சத்திரமான டேவிட் பெக்காமை சந்தித்துள்ளார்.
சார்லஸ் சந்திக்க மறுத்த காரணத்தாலையே, ஹரி மொத்தமாக ஹொட்டலில் தங்கும் முடிவுக்கும் வந்துள்ளதாக கூறுகின்றனர்.