கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் விடை.. இருந்தாலும் மதிப்பெண்கள் கொடுக்க என்ன காரணம்?
பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் விடையளித்த மாணவனுக்கு ஆசிரியர் மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்.
சில மாணவர்கள் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு சிரிக்கத்தக்க வகையிலும், ரசிக்கத்தக்க வகையிலும் விடையளிப்பார்கள். அந்த மாதிரியான மாணவரின் விடைத்தாள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூன்று கேள்விகள்
அந்த விடைத்தாளில் ஹிந்தி மொழியில் 3 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில், முதல் கேள்வி என்னவென்றால் உயிர்மெய் என்றால் என்ன? என்பதாகும். இந்த கேள்விக்கு, “உணவு சார்ந்த உருவகத்துடன், Matar Paneer மற்றும் அனைத்து வகையான காய்கறிகளின் கலவை” என்று பதில் அளித்துள்ளார்.
இதில் இரண்டாவது கேள்வி என்னவென்றால் கடந்த காலம் என்றால் என்ன? என்பதாகும். இந்த கேள்விக்கு, “கடந்த கால வடிவத்தில் வருவதே கடந்த காலம் ஆகும்” என்று எழுதியுள்ளார்.
கடைசியாக மூன்றாவது கேள்வி என்னவென்றால், பன்மை என்றால் என்ன? என்பதாகும். இந்த கேள்விக்கு மாமனார் மற்றும் மாமியாரின் பேச்சைக் கேட்கும் மருமகள் என்று பதில் அளித்துள்ளார்.
கேள்விகளுக்கு உரிய விடைகள் தவறாக இருப்பினும், விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 10-க்கு ஐந்து மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ‘இது உன்னுடைய சிந்தனை திறனுக்கு’ என்றும் பாராட்டியுள்ளார்.
இணையத்தில் பரவி வரும் இந்த விடைத்தாளுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.