பண்பாட்டு பன்மைத்துவத்தை வலியுறுத்தும் சிறப்பு ஒன்று கூடல்
பண்பாட்டு பன்மைதுவத்தை (Cultural Diversity) வலியுறுத்தும் வகையில் அமைந்த சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வு இன்று 22.5.2024 புதன்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது
ஆரம்ப கல்வி பயிற்சி நெறி ஆசிரிய மாணவி ஜெயந்தகுமார் சுலோசனாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.
ஆசிரிய மாணவர்களான சி. யனிஸ்டன் , இ. தேவமணி ஆகியோரும் ஆசிரிய மாணவர்கள் சார்பில் உரையாற்றினர்.
கலாசாலை அதிபர் ச. லலீசன் நிறைவுரை ஆற்றினார். விரிவுரையாளர் வேல். நந்தகுமார் சிறப்புரையாளருக்கான அறிமுகவுரையை ஆற்றினார்
இலங்கையில் பண்பாட்டு பன்மைதுவத்தை குறிக்கும் வகையில் ஆரம்ப கல்வி ஆசிரிய பயிலுநர்களால் தயாரிக்கப்பட்ட காணொலியும் வெளியிடப்பட்டது. சிறப்புரையாற்றிய இ. இராஜேஸ்கண்ணன் தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை கலாசாலை நூலகத்திற்குக் கையளித்தார்.