;
Athirady Tamil News

உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

0

உருளைக்கிழங்கு விலையை உயர்த்துவதற்கு இறக்குமதி வரிகளை விதிக்குமாறும், இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) கோரியுள்ளார்.

நாட்டில் ஏழைகள் உணவைத் தவிர்த்து வீட்டுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஒரு வேளைக்குக் குறைவாகவே உண்பதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இறக்குமதியை கட்டுப்படுத்தவேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (22.05.2024) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மோசமான நாணய நெருக்கடி
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு நிரந்தர வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது விலையை நிலைப்படுத்த உதவும் என்பதுடன் பற்றாக்குறை ஏற்பட்டால் வரியை நீக்கலாம் அல்லது குறைக்கலாம்.

இலங்கையின் வறியவர்கள் 2019 இல் 4 மில்லியனிலிருந்து 7 மில்லியனாக உயர்ந்து 2023 இல் சனத்தொகையில் 31 வீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வரலாற்றில் நாடு மிக மோசமான நாணய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

பிராந்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 10,000 பேரிடம் நடத்திய ஆய்வில், நாணய நெருக்கடிக்குப் பிறகு, 33 சதவீதம் பேர் உணவைத் தவிர்த்ததும், 47 சதவீதம் பேர் தங்கள் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டதும் கண்டறியப்பட்டுள்ளது. ” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.