இந்தியாவிலும் புதிய வகை கொரோனா: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக (Tamilnadu) சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் (West Bengal) ராஜஸ்தான் (Rajasthan), உத்தரகாண்டில் (Uttarakhand) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.