காசாவில் ஹமாஸ் அதிரடி : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு
வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது.
படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை ஹமாஸ் அமைப்பினரின் சினைப்பர் தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளானார்.
வெவ்வேறு தாக்குதல்களில்
அதேபோன்று கட்டடமொன்றுக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மற்றுமொரு படைவீரர் உயிரிழந்ததுடன் இன்னுமொருவர் படுகாயமடைந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 33,22,மற்றும்21 வயதுடைய இராணுவ வீரர்கள் என இஸ்ரேல் படை அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்பு
இந்த மூவரின் உயிரிழப்புடன் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கையில் தமது தரப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் படை மேலும் தெரிவித்துள்ளது.