;
Athirady Tamil News

30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை., வரலாறு படைத்த நேபாளி

0

நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீட்டா 30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

பத்து நாட்களில் இரண்டாவது முறையாக உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தார். இந்த சீசனில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி புதிய சாதனை படைத்தார்.

54 வயதான கமி ரீட்டா இன்று (புதன்கிழமை) காலை 7.49 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

மே 12-ஆம் திகதி, கமி ரீட்டா 29 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாகவும், இன்று 30 வது முறையாக சிகரத்தில் ஏறியதாகவும் கூறினார்.

1994-ஆம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

காமி ரீட்டா ஜனவரி 17, 1970-இல் பிறந்தார். 1992ல் மலையேறத் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே மலையேற்றத்தில் கவனம் செலுத்தினார். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக அவர் மலைகளில் ஏறுகிறார்.

Everest மட்டுமின்றி, அவர் Mt K2, Cho Oyu, Lhotse மற்றும் Manaslu மலைகளையும் ஏறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.