ஈரான் அதிபர் மரணம்.., கர்நாடகா சுவாமிகளின் ஆருடம் பலித்ததா?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடகாவின், கோடி மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகளின் ஆரூடம் பலித்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் அதிபர் மரணம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் உயிரிழந்தார்.
அவருடன் வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன், அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சிலரும் விபத்தில் உயிரிழந்தனர்.
வானிலை மோசமாக இருந்ததால் திசை மாறி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆருடம் பலித்ததா?
இந்நிலையில், கர்நாடகாவின், கோடி மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகளின் ஆரூடம் பலித்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.
இவர், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆருடம் கணித்திருந்தார். அப்போது, “நடப்பாண்டில் உலகில் உள்ள அதிகமான மக்கள் சங்கடங்களை சந்திப்பார்கள். அசம்பாவிதங்கள் நிகழும்.
அதிகமான மழை பெய்து மக்கள் அவதிப்படுவார்கள். யுத்த பீதி உள்ளது. உலகில் இரண்டு பிரதமர்கள் உயிரிழப்பார்கள். கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இவர் ஆருடம் கணித்ததன்படி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துவிட்டார்.