;
Athirady Tamil News

இலங்கையில் கடன் பெற காத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்

0

இலங்கையில் பலர் கடன் பெற காத்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் அண்மையில் இலங்கையின் நிதி எழுத்தறிவு பாதை வரைபடத்தை வெளியிடும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கடன் தேவை
மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சனத்தொகையில் 34.4 வீதமானோர் கடன் தேவையினால் அவதியுறுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர் சமூகம் பொருளாதார ரீதியாக சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றது. இந்த நாட்டில் பெண்களுக்கு நிதி அறிவு மற்றும் நிதி தொடர்பான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கடன் மேலாண்மை, சமூக பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிதி கல்வியறிவு பற்றிய அறிவு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.