அனுரவை ஆதரிக்கும் ரணில்: இரகசியங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) முன்னிலைப்படுத்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே முஜிபர் ரகுமான் (Mujibur Rahman) இதனை தெரிவித்துள்ளார்.
அரசின் ஆதரவு
கடந்த காலங்களில் ரணிலுக்கும் அனுரவுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது, தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கியிருந்தமை இதற்கான சிறந்த உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திசாநாயக்கவுக்கு உதவுவதுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்படுவதாக முஜிபர் ரகுமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.