பிரித்தானியாவிலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தேர்தலையொட்டி வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பிரித்தானியாவில் பல முக்கிய விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ குடும்பத்தினர்கூட, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், தாங்கள் கலந்துகொள்ள இருந்த பல நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
இந்நிலையில், பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும்வரை, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
விடயம் என்னவென்றால், தேர்தல் முடிவுகள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பாதகமான முடிவுகளைக் கொடுக்குமானால், அதாவது, ரிஷி பிரதமர் பதவியை இழப்பாரானால், ருவாண்டா திட்டம் செயல்படாமலே போகவும் வாய்ப்புள்ளது. காரணம், லேபர் கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், ருவாண்டா திட்டமே ரத்து செய்யப்படும் என லேபர் கட்சித் தலைவரான Keir Starmer தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.