யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை இன்று (24) திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தார்.