;
Athirady Tamil News

தொடரும் சீரற்ற வானிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் உருவாகும் சூறாவளி புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையி்ல், கடற்றொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை 05:30 மணி நிலவரப்படி 15.0° வடக்கு மற்றும் 88.4° கிழக்கிற்கு அருகில் மையம் கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

அத்தோடு, வானிலை அதிகாரிகளின் சமீபத்திய கணிப்புகளின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதன் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை (25), 2024 காலை 05:30 மணிக்கு கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான சூறாவளி
அதைத் தொடர்ந்து, 11:30 மணியளவில் அதே பகுதியில் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 60 -70 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன், அதிக மழை காரணமாக நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா என்பவை கொந்தளிப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.