;
Athirady Tamil News

கனடாவில் மதுபான விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

கனடாவிலுள்ள (Canada) மாகாணம் ஒன்றில் மதுபான விற்பனை குறித்து அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகளிலும் மதுபான வகைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அறிவித்துள்ளார்.

மதுபான வகைகள் விற்பனை
இந்தக் கோடை காலத்தில் இவ்வாறு மதுபான விற்பனையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.