பெலாரஸ் சென்றடைந்த விளாடிமிர் புடின்! அணு ஆயுத பயிற்சி குறித்து விவாதம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய அணு ஆயுத பயிற்சி குறித்து விவாதிக்க பெலாரஸ் நாட்டிற்கு வந்தடைந்தார்.
பெலாரஸ் பயணம்
மேற்கத்திய அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு பதிலடி கொடுக்க, இம்மாத தொடக்கத்தில் தந்திரோபாய அணு ஆயுதப் பயிற்சிகளை நடத்துமாறு தனது ராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அதன் தெற்கு இராணுவ மாவட்டத்தில் இந்த வாரம் முதற்கட்ட பயிற்சிகளை அறிவித்தது. இதில் ரஷ்யா இணைத்ததாகக் கூறும் உக்ரைனின் பகுதிகளும் அடங்கும்.
இந்த நிலையில் விளாடிமிர் புடின் (Vladimir Putin) வியாழன் பிற்பகுதியில் பெலாரஸ் வந்தடைந்தார். அவர் அந்நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவிடம், ”இரண்டாம் கட்ட பயிற்சிகள் பெலாரஸில் இருந்து எங்கள் இராணுவ கூட்டாளிகள் மற்றும் சக ஊழியர்களின் நேரடி பங்கேற்புடன் தொடர்புடையது” என்று கூறினார்.
அணு ஆயுத பயிற்சிகள்
இதனைத் தொடர்ந்து இவர்களின் பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு மற்றும் கூட்டு தந்திரோபாய அணு ஆயுத பயிற்சிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவோ அல்லது பெலாரஸோ எந்த இடத்தில் பயிற்சிகள் நடக்கும் அல்லது ஏதேனும் சோதனை துப்பாக்கிச்சூடுகளைச் சேர்க்குமா என்று கூறவில்லை.
இதற்கிடையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Andrei Belousov பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக Minsk சென்றார். அவர் பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சர் விக்டர் க்ரெனினை சந்திக்கிறார்.