சுவிஸ் மாகாணமொன்றில் சாரதி பணிக்கு ஆட்கள் தேவை
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொதுப்போக்குவரத்துக்கு சாரதிகளை பணிக்கமர்த்தும் பணியைத் துவங்கியுள்ளது.
சாரதி பணிக்கு ஆட்கள் தேவை
ஜெனீவாவுக்கு, இந்த ஆண்டு இறுதிக்குள் 200 புதிய சாரதிகள் தேவை என அம்மாகாணம் தெரிவித்துள்ளது.
இப்படி திடீரென சாரதிப் பணிக்கு ஆட்களை எடுக்க இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தொழிலாளர் யூனியன்கள், விடுப்பிலிருக்கும் சாரதிகளின் இடத்தை நிரப்ப கூடுதல் சாரதிகள் தேவை என கேட்கின்றன. இரண்டாவது, ஜெனீவா போக்குவரத்து நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அதற்கு கூடுதல் சாரதிகள் தேவைப்படுகிறார்கள்.
ஆக, இந்த இரண்டு காரணங்களுக்காகவும், சாரதிப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், இலக்கை அடையும் நோக்கில் சில விதிகள் கூட நெகிழ்த்தப்பட்டுள்ளன. அதாவது, 50 வயதுக்கு மேற்பட்டோரும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம், அத்துடன், பகுதி நேர வேலைக்கும் அனுமதி உள்ளது. மேலும், பெண்கள் அதிக அளவில் வரவேற்கப்படுகிறார்கள்.