பல முறை புகார் அளித்தும்… லண்டனில் 5 வயது குழந்தையின் மரணத்தில் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
கிழக்கு லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15 வது மாடியில் இருந்து ஐந்து வயது சிறுவன் சமையலறை ஜன்னலில் இருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்தான்.
சிறுவனின் தந்தையே
இந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக, ஆபத்தான ஜன்னல் தொடர்பில் சிறுவனின் தாயா புகார் கூறி 5 மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
சிறுவன் ஆலிம் அகமது சம்பவயிடத்திலேயே மரணமடைந்திருந்தான். மே 16ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், சிறுவனின் தந்தையே முதலில் மகனின் உடலை பார்த்துள்ளார்.
இதனிடையே பொதுமக்கலில் சிலர் அவசர உதவி சேவையினருக்கு தகவல் அளிக்க, 6.04 மணிக்கு மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து சேர்ந்தனர். அடுத்த 3 நிமிடங்களில் பொலிசாரும் வந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தற்போது நியூஹாம் கவுன்சில் நிர்வாகமும் விசாரணை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. சிறுவனின் இறுதிச்சடங்குகளுக்காக இதுவரை 11,945 பவுண்டுகள் தொகையை பொதுமக்கள் அளித்துள்ளனர்.
குடியிருப்பின் அந்த ஜன்னல்
சிறுவன் தவறி விழுந்து மரணமடைந்ததன் காரணம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே நியூஹாம் கவுன்சில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கில் பொலிசாருக்கும் உதவ தயார் என தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் தாயார் தங்கள் குடியிருப்பின் அந்த ஜன்னல் தொடர்பில் பலமுறை புகார் அளித்துள்ளதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெற்றோர் தூக்கத்தில் இருந்த நிலையில், சிறுவன் ஆலிம் அகமது பாடசாலைக்கு தயாராக விரைவாக எழுந்துள்ளதாக உறவினர் தெரிவித்துள்ளார். ஆனால் இப்படியான ஒரு நிலையை எதிர்கொள்ள நேரிடும் என கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.