;
Athirady Tamil News

கனடாவில் இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த உத்தரவு

0

கனடாவில் மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றில், 16 பேர்கள் கொல்லப்பட காரணமான சாரதியை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்திற்கு காரணமான சாரதி
கனடாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய Humboldt Broncos பேருந்து விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது விபத்திற்கு காரணமான சாரதியை நாடு கடத்த முடிவாகியுள்ளது.


கல்கரியில் ஜஸ்கிரத் சிங் சித்து தொடர்பில் குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் முன்னெடுத்த விசாரணையின் இறுதியில் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஜஸ்கிரத் சிங் சித்து கனேடிய குடிமகன் இல்லை என்பதாலும், மிக மோசமான குற்றத்தை முன்னெடுத்துள்ளதாலும் அவரை நாடு கடத்துவது உரிய நடவடிக்கை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியரான ஜஸ்கிரத் சிங் சித்து கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றுக்கொண்டவர். 2018 ஏப்ரல் மாதம் 16 பேர்கள் கொல்லப்பட்ட Humboldt Broncos பேருந்து விபத்தை அடுத்து, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாக குறிப்பிட்டு 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

Broncos அணியின் பேருந்து மீது
Saskatchewan பகுதியில் நடந்த இந்த கோர விபத்தில் 13 பேர்கள் காயங்களுடன் தப்பினர். கடந்த ஆண்டு அவருக்கு முழு பரோல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சித்து நாடு கடத்தப்பட உத்தரவாகியுள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த நடவடிக்கைகள் மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரையில் நீளலாம் என்றே கூறப்படுகிறது. கல்கரி பகுதியை சேர்ந்த சித்து லொறி சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று Broncos அணியின் பேருந்து மீது இவரது லொறி மோதியுள்ளது. Broncos ஜூனியர் ஹொக்கி அணியானது playoff ஆட்டத்திற்காக சம்பவத்தின் போது நிபாவினுக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.