முன்னாள் பிரதமர் தெரசா மே உட்பட 78 எம்.பிக்கள்… ரிஷி சுனக் எதிர்கொள்ளும் அடுத்த பெரும் சிக்கல்
முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரசா மே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் உட்பட ரிஷி சுனக் கட்சியின் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன்னர் தாங்கள் போட்டியிடுவதில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பெரும் சிக்கலாகவே பார்க்கப்படுகிறது
இது தற்போது ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 1997ல் லேபர் கட்சியின் டோனி பிளேர் பெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றும் முன்னர், சுமார் 75 கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவதில் இருந்து விலகினர்.
தற்போதும் அதே சூழல் மீண்டும் உருவாகியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த பல தலைவர்கள் போட்டியிடுவதாக இல்லை என அறிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் தெரசா மே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ்,
முன்னாள் கல்வி அமைச்சர் ராபர்ட் ஹால்ஃபோன், ரயில்வே அமைச்சர் Huw Merriman, வடக்கு அயர்லாந்து செயலாளர் Chris Heaton-Harris, பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள Craig Mackinlay உள்ளிட்ட பலர் அந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
ஜூன் 7ம் திகதி வரையில்
இந்த நிலையில், தொடர்புடைய தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். இதனிடையே வெளியான தகவலின் அடிப்படையில், லேபர் கட்சியில் இருந்தும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 7ம் திகதி வரையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.