மல்வான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
தொம்பே – மல்வான, மாய்வல பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வயல்வெளியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பினை அடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
குறித்த பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதனை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ரம்பொட நாவலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னமும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் தொம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.