நாடாளுமன்றில் பெண்களை குறிவைத்த மற்றுமொரு அதிகாரி : விசாரணைகள் தீவிரம்
பெண்களுக்கு தகாத ஆலோசனைகளை வழங்கி பல சந்தர்ப்பங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நாடாளுமன்ற தலைவர் ஒருவர் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர(Kushani Rohanadeera.)வின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது
பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போதும், சம்பந்தப்பட்ட துறைக்கு புதிய பெண் ஊழியர்களை சேர்த்துக் கொள்ளும்போதும் அந்த அதிகாரி தகாத முறைக்கு வருமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்ததையடுத்து இது தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஊழியர்கள் சிலர் எழுத்துபூர்வமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஒழுக்காற்று நடவடிக்கை
இதேவேளை, அழகிய பணிப்பெண்கள் குழுவொன்றை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற இல்ல பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு எதிராக நாடாளுமன்ற தலைவர்களால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.