;
Athirady Tamil News

முடிவு வந்த பஞ்சாயத்து – நாங்குநேரியில் கைக்கூலி சமாதானமான காவலர் – நடத்துனர்

0

சில தினங்கள் முன்பு காவலர் ஒருவர் பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

காவலருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இது திடீரென காவலர் – நடத்துனர் துறை சார் பிரச்சனையாக மாறியது. திடீரென, அரசு பேருந்துகளை நிறுத்திய காவலர்கள் பேருந்து ஓட்டுனர்கள் ரூல்ஸ் படி, சீட் பெல்ட் போடவில்லை என ஃபைன் போட்டனர்.

நிலைமை சற்று காய் மீறி போய், பல இடங்களிலும் போக்குவரத்துத்துறைக்கும் – காவல்துறைக்கும் இடையில் சற்று உரசலாக மாறியது. அதனை தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை நடத்தினர்.

தற்போது இருதரப்பிற்கும் இடையேயான பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. அதன்படி, விவகாரத்தில் தொடர்புடைய காவலர் ஆறுமுகபாண்டியும், நடத்துனரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பரஸ்பரம் சமாதானமாகியுள்ளார்கள். இது குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வீடியோவில் நடத்துனரும், காவலரும் ஒருவரை கைகுலுக்கி, டீ குடித்தும் சமந்தமாகினர்.

இந்நிலையில் அவ்வீடியோவில் பேசிய நடத்துனர் பேருந்தில் பயணம் செய்த போது நான் வாரண்ட் கேட்டேன். அதற்குப் பிறகு நீங்கள் டிக்கெட் எடுத்து விட்டீர்கள்.. ஆனால் சோசியல் மீடியாவில் அதை தவறாக பரப்பி விட்டார்கள்.. இதனால் தான் பிரச்சனை” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.