பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார்: ஆனால் உக்ரைனின் தலைவர் யார்? புடின் எழுப்பும் நியாயமான கேள்வி
உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் தலைமை குறித்து புடின் எழுப்பியுள்ள நியாயமான கேள்விக்கு பதில் இல்லை!
உக்ரைனின் தலைவர் யார்?
உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக புடின் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அது என்னவென்றால், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம், இம்மாதம், அதாவது, மே மாதம் 20 ஆம் திகதியுடன் முடிந்துவிட்டது.
அப்படியானால், ஜெலன்ஸ்கி சட்டப்படி உக்ரைனின் தலைவரா என கேள்வி எழுப்பியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின். சட்டப்படி உக்ரைனின் தலைவராக இருப்பவருடன்தான் நாம் பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என்றும் கூறியுள்ளார் புடின்.
உக்ரைனின் பதில்?
ரஷ்யாவின் நியாயமான கேள்விக்கு உக்ரைனிடம் பதிலில்லை. காரணம், உக்ரைன் சட்டப்படி, நாட்டில் போர் நடப்பதையொட்டி martial law என்னும் ராணுவ சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில், தேர்தல் நடத்த முடியாது.ஆக, நியாயமான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்லமுடியாத சிக்கலான ஒரு சூழ்நிலை உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.