;
Athirady Tamil News

விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்

0

விழிப்புலனற்ற வேலையில்லாத பட்டதாரிகளுக்கு விசேட செயற்திட்டம் ஊடாக விரைவாக அரச வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என விழிப்புலனற்ற பட்டதாரியான விஜயகுமார் விஜயலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் எனது பட்டப்படிப்பை முடித்து சுமார் நான்கு ஆண்டு கால பகுதிக்கு மேலாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

படிக்கும் காலத்தில் நாம் மற்றுமொருவரின் உதவியுடன் பல தடைகளை தாண்டிய கற்று, பட்டதாரி ஆனேன். இன்றும் நான் மற்றவர்களின் உதவியுடன் ஒரு தங்கி வாழ்பவனாக வாழ்கிறேன். நான் மாத்திரமின்றி என்னை போல விழிப்புலனற்ற மற்றும் விசேட தேவையுடைய பட்டதாரிகள் பலரும் வேலை வாய்ப்புகள் இன்றி காணப்படுகிறனர்.

நாம் சுயதொழில் செய்யும் நோக்குடன் வங்கிகளில் கடன் பெற முனைந்த போது, நிரந்தர வேலையற்ற நமக்கு கடன் தர முடியாது என வங்கிகள் மறுத்து விட்டன. தனியார் துறைகளுக்கு சென்றால் நீங்கள் பட்டதாரிகள் உங்களுக்கு அரசாங்கம் வேலை தர நீங்கள் இந்த வேலையில் இருந்து விலகி அரச வேலைக்கு சென்று விடுவீர்கள் என கூறி அவர்களும் வேலை தர மறுக்கின்றார்கள்.

எங்களால் அரச திணைக்களங்களின் வேலை செய்ய முடியும், குறிப்பாக தொலைத்தொடர்பு இயக்குனர்களாக , கணனி வேலை செய்பவர்களாக தரவு சேமிப்பாளர்களாக எம்மால் பணியாற்ற முடியும்

கணனி திரையில் என்ன இருக்கிறது என்பதனை எம்மால் பார்க்க முடியாதே தவிர, எம்மால் கடிதங்கள் தட்டச்சு செய்வதற்கு , மின்னஞ்சல்கள் அனுப்புவதற்கு, தரவுகளை சேமிப்பதற்கு என கணனியில் பல வேலைகளை செய்ய முடியும், விழிப்புலனற்றவர்களுக்காக தொழினுட்ப வசதிகள் பல வந்துள்ளன. எனவே எம்மால் திணைக்களங்களின் பணியாற்ற முடியும்.

எமக்கான வாய்ப்புக்களை தாருங்கள். நாம் தொடர்ந்தும் தங்கி வாழ்பவர்களாக வாழ விரும்பவில்லை. எமக்கு அரச வேலை வாய்ப்பு கிடைத்தால் நாம் எமது ஊதியத்தில் வாழ முடியும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.