கொழும்பில் முறிந்து விழும் மரங்கள் : போக்குவரத்தில் பெரும் சிக்கல்
தற்போது நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்தார்.
இதில் 19 மரங்கள் விஹார மகாதேவி பூங்காவில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரங்களை அகற்றும் பணி
மற்ற மரங்கள் சாலைகளில் விழுந்தன. தற்போது அந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த பகுதிகளில் பாதுகாப்பற்ற மரங்கள் உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.