;
Athirady Tamil News

சீனாவுக்கு எதிராக வரி விதித்து வர்த்தக போரை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா!

0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு மீண்டும் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை அமெரிக்க (United States) வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சீனாவில் (China) இருந்து இறக்குமதி செய்யப்படும் வரிச்சலுகைக்குரிய 400 பொருட்களில் 250 பொருட்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.

வரி விதிப்பு
ஏற்கனவே சீனா- அமெரிக்கா மத்தியிலான வர்த்தகத்தில் அதிகப்படியான பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இரண்டு நாடுகளும் அடுத்தடுத்து வரி விதிப்பை விதித்து, தமக்கிடையே வர்த்தக போரை தீவிரப்படுத்தியுள்ளன.

சீனாவின் நிலைப்பாடு
அமெரிக்காவின் தேர்தலுக்கு முன்னர் , தமது நிலைப்பாட்டை உலக நாடுகளும், தனது நட்பு நாடுகளுக்கும் காட்டுவதற்காக, அமெரிக்கா, சீனாவின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையிலேயே தற்போது அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வரி விதிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.