;
Athirady Tamil News

உயிர் காக்கும் Golden Rice சாகுபடிக்கு நீதிமன்றம் தடை: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

0

பிலிப்பைன்ஸ் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Golden Rice சாகுபடிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வணிக ரீதியாக பயிரிடுவதற்கு ஒப்புதல்
Golden Rice சாகுபடிக்கு தடை விதிப்பதால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறப்புக்கு காரணமாகலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ல் தங்க அரிசியை வணிக ரீதியாக பயிரிடுவதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக பிலிப்பைன்ஸ் மாறியது.

Golden Rice என்பது வைட்டமின்-ஏ குறைபாட்டை போக்குவதற்கு உருவாக்கப்பட்டதாகும். வைட்டமின்-ஏ குறைபாட்டால் உலகின் பல பகுதிகளில் உள்ள குழந்தைகள் ஊனமடைவதற்கும் இறப்புக்கும் காரணமாக அமைந்தது.

ஆனால் கனடாவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பான Greenpeace தீவிர பரப்புரை மேற்கொண்டதுடன், உள்ளூர் விவசாயிகளை தூண்டிவிட்டு கடந்த மாதம் நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி அந்த ஒப்புதலை ரத்து செய்ய வற்புறுத்தினர்.

Golden Rice பாதுகாப்பானது அல்ல என்ற வாதத்தை Greenpeace முன்வைத்துள்ளது. தற்போது பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் Golden Rice சாகுபடிக்கு தடை விதித்துள்ளது மகத்தான வெற்றி என Greenpeace அமைப்பால் போற்றப்பட்டு வருகிறது.

ஆனால் விஞ்ஞானிகள் பலர், Golden Rice ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், உண்மையில் Golden Rice உயிர் காக்கும் அரிசி என்றும் விளக்கமளித்துள்ளனர்.

மட்டுமின்றி, நீதிமன்றத்தின் இந்த முடிவு உண்மையில் பேரழிவு என்றும் குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றம் விஞ்ஞானத்திற்கு எதிரான தீர்ப்பை அளித்துள்ளது என்றும், Golden Rice ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும்,

Golden Rice பாதுகாப்பானது
நீதிமன்றத்தின் இந்த முடிவு பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக அமையும் என்றும் எச்சரித்துள்ளனர். இதனிடையே, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மற்றும் விவசாய நிபுணர்கள் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

இதனிடையே வைட்டமின்-ஏ குறைபாடு பரவலாக காணப்படும் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகள் Golden Rice சாகுபடிக்கு தயாராகி வந்த நிலையில், தற்போது Greenpeace அமைப்பால் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் Golden Rice பாதுகாப்பானது என்றே தீர்ப்பளித்துள்ளன. Golden Rice உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்தும், இதுவரை வணிக ரீதியாக முன்னிலைப்படுத்தப்படவில்லை.

Golden Rice-ஐ ஆதரித்து Greenpeace அமைப்புக்கு எதிராக கடந்த 2016ல் 150 க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றவர்கள் ஒரு திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.