அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரின் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எட்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும்
ஹமாஸ் அமைப்பினர் ரபா பகுதியில் இருந்து தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியில் இருந்து குறைந்தது எட்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் பலவற்றை இடைமறித்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ரபா மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில்
காசா முழுவதும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் இந்த வாரம் தீர்ப்பு வழங்கிய போதிலும், இஸ்ரேல் இராணுவம் ரபா மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.