;
Athirady Tamil News

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு: பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அச்சம்

0

தென் பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சுமார் 670 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் (UN) சபையின் அதிகாரி செர்ஹான் அக்டோப்ராக் (Serhan Aktoprak) இதனை சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போது 150க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பாதிப்பு
இந்நிலையில், 670இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் தண்ணீர் வழிந்தோடுவதுடன் நிலம் சரிவது தொடர்வதனாலும் பாரிய ஆபத்து ஏற்படலாம். அத்துடன், உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த கிராமத்திலிருந்து 1,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.