வேறு வழியின்றி 20 அடி உயரத்திலிருந்து குதித்த 8 மாத கர்ப்பிணி., அடுத்து என்ன நடந்தது?
வேகமாக எதையும் செய்யவேண்டாம், பளுத்தூக்க வேண்டாம், அதிகம் பயணிக்க வேண்டாம் என கர்ப்பிணிப் பெண்களுக்கு பல அறிவுரைகளை வைத்தியர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் அறிவுரை கூறுவார்கள்.
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தொந்தரவு ஏற்படாதவாறு, கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்படி தூங்க வேண்டும், உத்கரவேண்டும் என ஆலோசனை வழங்கப்படுகிறது.
இவ்வாறு கர்ப்பிணிப் பெண்களின் அந்த நாட்கள் மிகவும் கடினமானவை.
ஆனால் இங்கு ஒரு பெண் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், 20 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.
26 வயதான ரேச்சல் (Rachel Standfest) தனது குழந்தை Brynlee Rose-ன் பிறந்தநாளில் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலான பதிவு…
நான் 8 மாத (36 வாரங்கள்) கர்ப்பிணியாக இருந்த அன்று நள்ளிரவில் திடீரென வீட்டில் தீப்பிடித்தது. அன்று இரவு நான் இரண்டாவது மாடியில் இருந்தேன். படிக்கட்டுகளின் அருகே பார்த்தபோது, கடும் புகை மூட்டமாக இருந்தது.
உடனே என் கணவர் Travis-ஐஎழுப்பி அம்மாவை அழைத்தேன். டிராவிஸ் ஜன்னல் கண்ணாடிகளை ஓரமாக நகர்த்தி வெளியே தன்னைத் தாழ்த்திக் கொண்டார். அம்மா வெளியில் இருந்து உதவி செய்து கொண்டிருந்தாள். அந்த நாள் எனக்கு அவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது.
மறுநாள் கண்விழித்தபோது அழகான குழந்தையைப் பெற்றெடுத்ததாக ரேச்சல் கூறுகிறார்.
அன்று டிராவிஸ் என்னை வீட்டை விட்டு ஜன்னல் வழியாக வெளியேற்ற முயன்றான். நாங்கள் இரண்டாவது மாடியில் இருந்ததால், 20 அடி கீழே இறங்க வேண்டியிருந்தது. அது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.
நான் உயிர் பிழைக்க வேண்டுமானால் இங்கிருந்து குதித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். “தீ மோசமாகி வருவதால் நான் 20 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டியிருந்தது” என்கிறார் ரேச்சல்.
டிராவிஸ் நெருப்பின் நடுவில் வெளியே வந்தார். இந்த தீ விபத்தில் எனக்கும் எனது கணவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. உயரத்தில் இருந்து குதித்ததால் எனது தலையிலும் காயம் ஏற்பட்டது, என்று ரேச்சல் தெரிவித்தார்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள் அறுவை சிகிச்சை
இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். மருத்துவமனைக்கு வந்த 15 முதல் 20 வினாடிகளில் எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது, தீக்காயங்கள் இருந்தபோதிலும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து என் குழந்தையை காப்பாற்றினர். எங்கள் இருவரின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.
நான் 20 அடி உயரத்தில் இருந்து குதித்தாலும், என் மகள் அதிசயமாக உயிர் பிழைத்தாள். குழந்தையின் பெயர் என்ன என்பதை நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, குழந்தைக்கு Brynlee Rose என்று பெயரிடப்பட்டது. Brynlee என்றால் தீயில் எரிந்த என்று பொருள்.
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்
ரேச்சல் முழுமையாக குணமடைய ஒரு மாதம் எடுத்துக் கொண்டாலும், டிராவிஸ் குணமடைந்து ஒரு வாரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் விழாவிற்குப் பின்னால் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ரேச்சல் பகிர்ந்துள்ளார்.