;
Athirady Tamil News

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க தாய்லாந்திற்கு சென்ற குழுவினர்

0

மியன்மாரின் (Myanmar) சைபர் குற்றவலயத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு (Thailand) விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த குழுவினர் இன்று (27) அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார (Wasantha Yapa Bandara), ஜே.சி. அலவத்துவல (J. C. Alawathuwala) மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா (Sujith Sanjaya Perera) ஆகியோரே தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ளனர்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இருந்து இன்று அதிகாலை 01.10 அளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) விமானமூடாக தாய்லாந்தின் பாங்கொக் (Bangkok) நோக்கி குறித்த குழுவினர் சென்றுள்ளனர்.

மியன்மார் சைபர் குற்றவலயத்தில் அகப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக மியன்மார் மற்றும் ரஷ்யாவில் (Russia) 5 நாட்கள் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தாய்லாந்து மற்றும் மியன்மார் மகாநாயக்கர்கள் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.