;
Athirady Tamil News

ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் உலகின் மிகவும் குளிர்ச்சியான நகரம்

0

உலகின் குளிர்ச்சியான நகரம் என அழைக்கப்படும் Yakutsk நகரம், சைபீரியாவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வைக் குறித்த சில விடயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

உலகின் குளிர்ச்சியான நகரம்
உலகின் குளிர்ச்சியான நகரம் என அழைக்கப்படும் Yakutsk நகரத்தில், குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 64.4 டிகிரி செல்சியஷுக்கும் கீழே செல்கிறது. வெயில் காலத்தில் நிலவும் வெப்பநிலை, 20 டிகிரி செல்சியஷ்.

நம் நாடுகளில், வெயில்காலத்தில் ஏசியையே 22 முதல் 26 டிகிரி செல்சியஷில்தான் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அப்படியானால், Yakutsk நகரத்தில் குளிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சமாக கணிக்கமுடியும்.

ஆனால், குளிர் என்பதற்காக வேலைக்குச் செல்லாமலோ, பள்ளிக்குச் செல்லாமலோ இருக்கமுடியுமா? ஆக, குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெளியே செல்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால், குளிர் காரணமாக கார்களின் பேட்டரிகள் வழியில் திடீரென செயலிழந்துவிடும்.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அவ்வளவுதான், மரணம் மட்டுமே முடிவு. ஆக, குளிர்காலத்தில் நூற்றுக்கணக்கானோர் குளிரில் உறைந்து உயிரிழக்கிறார்கள்.

அன்றாட பிரச்சினைகள்
குளிரில் வெளியே செல்வதால், மக்கள் frostbite மற்றும் hypothermia ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது சர்வசாதாரணம்.

ஆகவே, குளிர் காரணமாக மக்கள் அவதியுறுவதால், மக்கள் தங்களை வெப்பப்படுத்திக்கொள்வதற்காக, அரசே ஆங்காங்கே முகாம்களை அமைத்துள்ளது.

இன்னொரு பிரச்சினை, வெயில் இல்லாததால், உடலில் ஏற்படும் வைட்டமின் D குறைபாடு. எலும்புகளின் நலனுக்கு வைட்டமின் D அவசியம் என்பதும், இந்த வைட்டமின் D வெயிலிலிருந்து இயற்கையாகவே கிடைக்கும் என்பதையும் பலரும் அறிந்திருக்கலாம்.

ஆகவே, மக்கள் வைட்டமின் D மாத்திரைகள் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நிலையும் காணப்படுகிறது.

இன்னொரு பெரிய பிரச்சினை, கடுங்குளிர் காலங்களில், வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் ஏற்படும் மனச்சோர்வுக்காக, சிலர் இணையம் வாயிலாக மன நல ஆலோசனைகளும் எடுத்துக்கொள்ள நேர்கிறதாம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.