;
Athirady Tamil News

உரிய நீதி வேண்டும்… லண்டனில் 43 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமடைந்த நபர்

0

தெற்கு லண்டனில் பரிந்துரைக்கப்பட்டதைவிடவும் 10 மடங்கு அதிகமாக வலி நிவாரணி அளிக்கப்பட்டதால் மரணமடைந்த நபர் தொடர்பில் குடும்பத்தினர் உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நீண்ட காலமாக சிறுநீரக நோயால்
கிங்ஸ்டன் பகுதியில் குடியிருந்து வந்த சந்திரகாந்த் படேல் என்பவர் நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 2022 அக்டோபர் மாதம் திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே பரிந்துரைக்கப்பட்ட அளவை விடவும் 10 மடங்கு அதிகமாக அவருக்கு வலி நிவாரணி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுமாற்றம் மற்றும் களைப்பாக உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து அவர் அவதானிப்புகளுக்காக அதே நாள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார். இரவு முழுவதும் கண்காணிக்கப்படுவார் என்றும், சிறுநீரக செயல்பாடு சீராக இருந்தால் மறுநாள் வீட்டுக்கு அனுப்பலாம் என்றும் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் அவரது நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கே அவர் 43 நாட்கள் சிகிச்சையில் இருந்துள்ளார்.

உரிய நீதி கிடைக்கவேண்டும்
இந்த நிலையில் டிசம்பர் 8ம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 50mg அளவுக்கு வலி நிவாரணி அளிக்கப்பட வேண்டிய நிலையில், அவருக்கு 500mg ஒரேயடியாக அளிக்கப்பட்டதே அவரது இக்கட்டான நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

உடற்கூறு ஆய்வில், சந்திரகாந்தின் மரணத்திற்கு பல உறுப்புகள் செயலிழந்ததாகவும், அவர் கடுமையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி அவரது ரத்தத்தில் அதிக அளவிலான அமிலம் கலந்திருந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான சந்திரகாந்த் பழகுவதற்கு இனிமையான நபர் என்றே அவரது நண்பர்கள் பலர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது மரணத்திற்கு காரணம் மருத்துவமனை ஊழியர்களின் தவறான முடிவு என்றும், தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.