ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்த வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்றமோ இந்த விவகாரத்தில் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கீடு
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பொதுவாக்கெடுப்பின் மூலம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசியல் சாசனத்தின் பிரகாரம் எவ்வித வாய்ப்பும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்சவும் இந்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சனம் செய்வதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.