;
Athirady Tamil News

30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் ஒரு கட்டிடம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா….

0

சீனாவில் (China) 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 36 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளதுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல விடயங்கள் இதில் உள்ளன.

வினோதமான கட்டுமானங்களை உருவாக்குவதில் சீனர்கள் வல்லுநர்கள். சீனாவில் இதுபோன்ற ஆச்சரியமூட்டும் பல கட்டிடங்கள் இருக்கின்றன.

30 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்
அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று சீனாவில் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் இப்போது மொத்தம் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

இத்தனை பேர் இந்த கட்டிடத்தில் வசிக்கும் நிலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த கட்டித்திற்குள்ளேயே இருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.

சீனாவின் ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சரி நகரில் கட்டப்பட்ட “ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட்“ தான் அந்தக் குடியிருப்பின் பெயர். எஸ் (S) வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 30 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இந்தக் குடியிருப்பு ஒரு நகரத்தைப் போலவே இருக்கிறது.

இந்த 36 மாடி கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்ட போது இருபதாயிரம் பேர் அதில் வாழ்ந்தனர். இப்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை எட்டியுள்ளது.

அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன
குறித்த கட்டிடம் ஒரு காலத்தில் ஹோட்டலாக இருந்தது. ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. 206 மீற்றர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் பல வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி உள்ளது. நீச்சல் குளம், முடிவெட்டும் கடை, பல்பொருள் அங்காடி மற்றும் இணையத்தள மையம் ஆகியவையும் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் எதற்கும் வெளியே செல்ல தேவையில்லை. இங்கேயே அவர்களுக்கான அனைத்தும் கிடைக்கிறது.

இங்கு பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அதே போல கணிசமான அளவில் சிறு வணிகர்களும் இருக்கிறார்கள். இந்தக் கட்டிடம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.