வட கொரியா மீண்டும் உளவு செயற்கைக்கோள்?
வட கொரியா திங்கள்கிழமை ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியதாகவும், அதில் அந்த நாட்டின் 2-ஆவது செயற்கைக்கோள் இருந்திருக்கலாம் என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராக்கெட் புறப்பட்ட 4 நிமிஷங்களில் அதன் சிதறல்கள் கடலின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டது. எனினும், தனது செயற்கைக்கோளை வட கொரியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதா என்பது தெரியவில்லை என்று அவா்கள் கூறினா்.
முன்னதாக, இது குறித்து தங்களிடம் வட கொரியா முன்கூட்டியே எச்சரித்ததாக ஜப்பானும் கூறியிருந்தது.