திடீரென எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அலைமோதும் மக்கள் கூட்டம்!
எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்தது,
விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
We would soon need a traffic policeman on Mount Everest! Crazy! pic.twitter.com/XIBNyNe3xm
— Satish Acharya (@satishacharya) May 27, 2024
8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்டில் ஏறி பலரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், சில நாட்களுக்கு முன்பு 16 வயதான காம்யா கார்த்திகேயன் என்ற சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம் வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
இதே போல் சில நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.