;
Athirady Tamil News

இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

0

அவுஸ்திரேலியா (Australia) அரசாங்கம் சிறிலங்காவுக்கான தனது பயண ஆலோசனைகளில் சில எச்சரிக்கைகளை சேர்த்துள்ளது.

குறித்த எச்சரிக்கையில் சிறிலங்காவிற்கு பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிறிலங்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் எனவும் அவை வன்முறையாக மாறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் மற்றும் ஊடகங்களின் தகவல்களை கவனிக்குமாறும் அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் (Colombo) மருத்துவச் சேவைகள் அவுஸ்திரேலியாவின் தரத்தில் இல்லையென்றும் மற்றும் தலைநகருக்கு வெளியே அவை மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்படும் பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்
இந்த நிலையில், சிறிலங்காவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான அபாயத்தை இந்த ஆலோசனை எடுத்துக்காட்டியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படும் பட்சத்தில் உங்களுடன் தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை உடன் வைத்திருக்குமாறு குறித்த பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் நிலவும் அபாயம் அதிகமாக காணப்படுவதால் அவதானத்துடன் இருக்குமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.