;
Athirady Tamil News

தேர்தலில் தோற்றால் அமெரிக்காவில் குடியேற திட்டம்? பிரித்தானிய பிரதமர் ரிஷி விளக்கம்

0

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தேர்தலில் தோல்வியடைந்தால், அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குற்றச்சாட்டு
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் தோற்றால், அவர் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் குடும்பத்துடன் குடியேற திட்டமிட்டுள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Zac Goldsmith என்பவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் நேற்று பிரதமர் ரிஷியிடம் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த ரிஷி, அது உண்மையில்லை என்று கூறியுள்ளார். பிரித்தானியா எனது தாய்நாடு, ஆகவே, பிரித்தானியாவிலேயே வாழ்வது என உறுதிபூண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியினர், கட்சித்தலைவரும், பிரதமருமான ரிஷிக்கு எதிராக திரும்பி வரும் நிலையில்தான், இத்தகைய விமர்சனம் ஒன்று ரிஷி சர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராலேயே முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.