;
Athirady Tamil News

2000 பேர் உயிருடன் புதையுண்ட நாட்டிற்கு இந்தியா 8 கோடி நிதி உதவி

0

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.

தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடுமையான இயற்கை பேரிடர் காரணமாக பயங்கர சோகம் நடந்துள்ளது.

தலைநகர் Port Moresby-யில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Enga மாகாணத்தில் உள்ள கவோகலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதில் 2,000 பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

இந்த சோகத்தின் போது பப்புவா நியூ கினியாவுடன் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில். இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ.8.3 கோடி) உடனடி உதவியை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மறுபுறம், இந்த துயர சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கடினமான காலங்களில் இருக்கும் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு அனைத்து விதமான ஆதரவையும் உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.

கடந்த காலங்களிலும், இந்தியா பப்புவா நியூ கினியாவுக்கு நிதி உதவி அளித்துள்ளது. 2018 பூகம்பம், 2019 மற்றும் 2023 எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளின் போது இந்தியா பப்புவா நியூ கினியாவுக்கு ஆதரவாக நின்றது, நிதி உதவி அளித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.