;
Athirady Tamil News

பிரெஞ்சு நதி ஒன்றில் இயற்கை உபாதைகளை கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு: ஒலிம்பிக் செலவுக்கு எதிர்ப்பு

0

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரெஞ்சு நதி ஒன்றை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்ப்பாளர்கள் அந்த நதியில் மலம் கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒலிம்பிக் செலவுகளுக்கு எதிர்ப்பு
பிரன்ஸ் தலைநகர் பாரீஸில், ஜூலை மாதம் முதல், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நீச்சல் போட்டிகளுக்காக Seine நதியை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்காக 1.2 பில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட உள்ளன.

இவ்வளவு பெரிய தொகையை, நதியை சுத்தம் செய்வதற்காக அரசு ஒதுக்கியுள்ள விடயம் பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. அதை நாட்டு மக்கள் நலனுக்காக வேறு ஏதாவது விடயத்துக்காக பயன்படுத்தலாமே என்கிறார்கள் அரசை விமர்சிப்பவர்கள்.

மோசமான வகையில் எதிர்ப்பு

இந்நிலையில், நதியின் சுத்தத்தைக் காட்டும் வகையில், ஜூன் மாதம் 23ஆம் திகதி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், பாரீஸ் மேயர் Anne Hidalgoவும், Seine நதியில் நீந்த திட்டமிட்டுள்ளார்கள்.

பெரும் தொகையை ஒலிம்பிக் போட்டிகளுக்காக நதியை சுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் எதிர்ப்பாளர்கள், பிரான்ஸ் ஜனாதிபதியும், பாரீஸ் மேயரும் Seine நதியில் நீந்த திட்டமிட்டுள்ள அதே நாளில், நதியில் மலம் கழிக்கவருமாறு பொதுமக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்கள்.

அதையொட்டி, சமூக ஊடகங்களில் #JeChieDansLaSeineLe23Juin (I Poop in the Seine on June 23rd) என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.