மீண்டும் இன்னொரு தோற்று நோயா? பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிக்கை
நாம் இன்னொரு தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டடியிருக்கும் என பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிகை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று உலகை உலுக்கிக்கொண்டே இருக்கிறது. புதுப்புது வகைகளாக உருவெடுத்து உலகம் முழுவதும் பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பரவிக்கொண்டே இருக்கிறது.
இதுவரை அமைதியாக இருந்த வைரஸ் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சமீபகாலமாக சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் அதிகரித்து வரும் தோற்று எண்ணிக்கை பரவலான கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பிரித்தானிய அரசின் முன்னாள் தலைமை ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் (Patrick Vallance) பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கொரோனா போன்ற இன்னொரு நெருக்கடியை மனிதகுலம் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பயங்கரமான அனுபவங்களிலிருந்து உலகம் தப்பியுள்ளது. ஆனால், தொடர்ந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
நெருக்கடியை எதிர்கொள்ளும் போது உடனடியாக பதிலளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறன் தேவையான அளவில் கிடைக்க வேண்டும், இதனால் லாக்டவுன், சமூக இடைவெளி போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவையில்லை என்று அவர் கூறினார்.
2021ஆம் ஆண்டு அவர் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் 2023ஆம் ஆண்டுக்குள் பல நாடுகள் மறந்துவிட்டன என்றார். இது எள்ளளவும் ஏற்கத்தக்கதல்ல.
போர் இல்லை என்றாலும் இராணுவத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல, தொற்றுநோய் வருவதற்கு முன்பே அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைக்கவேண்டியது அவசியம் என்று அவர் கூறுகிறார்.
நெருக்கடி காலங்களில் நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கு உலக சுகாதார அமைப்பு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பேட்ரிக் வாலன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.