இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய தகவல்… அரண்மனையில் குவிந்த கடிதங்கள்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தற்போது புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுத்து வரும் நிலையில், விரைவில் நலம்பெற வேண்டும் என்ற வாழ்த்து அட்டைகளை மக்கள் தொடர்ந்து அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆயிரம் அஞ்சல் அட்டைகள்
இளவரசி கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை வெளிப்படுத்திய நாள் முதல் பல ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அரண்மனையில் குவிந்து வருவதாக கூறுகின்றனர்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் இருந்து கேட் மிடில்டன் விலகியுள்ளதுடன், சிகிச்சையை மட்டும் கவனித்து வருவதாக கூறுகின்றனர். இதனால், இந்த ஆண்டில் அவருக்கான அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு வாரமும் ஆயிரம் கடிதங்கள் வரையில் அரண்மனைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் என்பதை அறிவித்த பின்னர், இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என்றே கூறுகின்றனர்.
மருத்துவர்கள் அனுமதித்தால்
சமீப வாரங்களில், கேட் மிடில்டன் தமது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும், சிகிச்சையை தொடர்வதுமாக உள்ளார் என்றே அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கேட் மிடில்டன் குணமடையும் வரையில் அவருக்கு தொல்லை தராமல் இருப்பதே முறை என்றும் அரண்மனை ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மட்டுமின்றி, மருத்துவர்கள் அனுமதித்தால் அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என பிரித்தானிய அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர்.